ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 15

சென்னை போன்றதொரு பெருநகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மலைக் குன்றுகள் அமைந்திருப்பதை சுற்றுலாத் துறை சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அது வருமானத்துக்கு வருமானம், நகரத்துக்கும் அழகு என்று எனக்கு எப்போதும் தோன்றும். குன்றத்தூர், திருநீர்மலை, திருசூலம், பறங்கிமலை, சின்ன மலை என்று ஒவ்வொரு குன்றுக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது. திருசூலம் குன்றின் மறுபுறம் உள்ள திருசூலம் கிராமத்துக்குப் போய் அங்குள்ள பெரியவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் சரித்திர கால யுத்தங்களெல்லாம் அங்கே நடந்ததாகச் சொல்வார்கள். முன்னொரு காலத்தில் இந்தப் பிராந்தியத்துக்கு … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 15